loading
Shiva Shiva
31 July 2018 7:01:45 AM UTC in Stories

மலரும் காதல் கல்யாணம் வரை

மலரும் காதல் கல்யாணம் வரை
மலரும் காதல் கல்யாணம் வரை
  மலரும் காதல் கல்யாணம் வரை 

 பாகம் --1  அதிகாலை வேலை அழகிய கிராமம் குயில்களும் சேவலும் கூவ மயில்கள் அகல ..விடியல் கிராமத்தில் பெருசுகளும் இளஞ் சிறுசுகளும் தண்ணி குடம் எடுத்து கொண்டு கம்மாய்க்கு செல்ல ஏய் பவானி எத்தனை குடம் டி எடுத்து போற என்று அம்மா கேட்கவும் 3 மா என்கிறாள் பவானி டேய் ....முருகா இந்த கோழியை பிடிச்சி கூடு டா ...என் டி என்கிறான் . முருகன் டேய் அம்மா இத வூடாத முட்டை வைக்கும் னு சொன்ன நான் கூடையை திறக்கவும் ஓடிருச்சி டா பிடிச்சி கூடு டா என்கிறாள் பவானி போடி நீ நேத்து ஹோம் ஒர்க் பண்ணி கூடு டி நா இல்லாத சீன போட்ட  நான் இப்ப பிடிச்சி குடுக்க முடியாது டி ன்றான் போடா நான் உங்க அண்ணனை கூப்பிட்டு பிடிக்க சொல்றேன் னு சொல்லவும் ஏன் டி நான் அடிவங்கவா சரி ...வா நானே பிடிச்சி தரேன் என்று சொல்லி பிடிக்க போகிறான் பவானி 10 வது படிக்கும் இளங்குமரி ஊரில் செல்லமாக அம்மு என்று அழைப்பார்கள் ...சூட்டி தனம் நிறைந்த குறும்பு ..முருகன் 7 வது படிக்கும் சிறுவன் ... சிவா வின் தம்பி ....மலரும் காதல் கல்யாணம் வரை 

 தொடர்ச்சி - 2  சிவா 12 வது படித்து விட்டு சூழ்நிலை காரணமாக தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தான் அடிப்படை ஊதியம் ..அப்பா விவசாயி,அம்மா தீப்பெட்டி ஓட்டும் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்கள் சிவா பெரிய எதிர்ப்பார்ப்பு ஏதும் இல்லை அவனுக்கு ...ஒரே எண்ணம் நல்ல நிலைக்கு குடுமபத்தை கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டும் ...வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடின அவர்களுடன் வேலை செய்யும் சில செல்போன் வாங்கியிருந்தார்கள் .அவன் நண்பன் தங்கராஜ் டேய் நீயும் வாங்கு என்றான் மனதில் குடும்ப சூழ்நிலை ..கொஞ்சம் வருத்தம் டேய் நான் நாளைக்கி யோசிச்சி சொல்றேன் டா நிதானமா முடிவெடுத்த நல்ல இருக்கும்னு அம்மா சொல்வாங்க நைட் அத்தா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு நாளைக்கி சொல்றேண்டா னு சொல்லி தங்கராஜை அனுப்பி வைக்கிறான் சிவா .. இரவு இலவச டிவி யில் படம் ஓடி கொண்டிருக்க பக்கத்துக்கு விட்டு சிட்டு பவானி இவர்கள் வீட்டில் படம் பார்த்து கொண்டிருக்கிறாள் .வேலைக்கு போன சிவா வீட்டுக்கு வர கதவை தட்டுகிறான் ஆத்தா கதவை திறனு ...சிவாவின் அம்மா பக்கத்துல ஒரு ஜோலியா நான் போறேன் இப்ப வாறேன் சொல்லிட்டு பவானியை வீட்டில் விட்டு போய் விட்டார் . பவானி எழுந்து போய் கதவை திறக்கும் பொழுது கதவை வேகமாக வெளி பக்கமாக திறக்க கதவு சிவாவின் மணடையாய் பதம் பார்க்கிறது .ஏய் யாரு டி நீ இப்படி கதவை திறக்க உனக்கு கண்ணே தெரியாத னு  சிவா கத்த இல்ல மெதுவா தான் திறந்தேன் கதவு ரெம்ப காணாம இருக்கறதுனால வேகமா வந்திருச்சின்னு பவானி சொல்ல... சாரி னு சொல்றத கூட காதுல வாங்காம உல் நூழைக்கிறான் சிவா . பவானிக்கு சின்ன பயத்துடன் அவள் வீட்டுக்கு போகிறாள் ...  

மலரும் காதல் கல்யாணம் வரை தொடர்ச்சி ...பாகம் தொடர்ச்சி - 3 

 அவன் என்ன லூசா என்ற கேள்வியுடன் வீட்டுக்கு போகிறாள் அவனை யாரு கதவுக்கு பின்னாடி நிக்க சொன்னது கதவு திறந்த இடிச்சிருச்சி நான் என்ன பண்ண ன்னு நினைச்சிகிட்டே செல்கிறாள் அதுக்கு லூசு மாதிரி கத்துறான் . சாரி சொன்னதுக்கு கூட கேட்கேல னு மனசுல ஒரு சின்ன வருத்தம் . பவானிக்கு ... மறு நாள் காலை சிவா வேலைக்கு செல்ல வில்லை கதவு இடித்ததில் லேசாக நெற்றியில் வீக்கம் அதற்க்கு வைத்தியம் பார்க்க வீட்டில் இருந்து விட்டான். பவானி க்கு சின்ன வருத்தம் நம்ம கதவு திறக்க போய் இவன் நெறியிலே அடிபட்டதுனு ...பார்த்து கொண்டே பள்ளிக்கு செல்கிறாள் .அன்று அவள் மன நிலையில் சின்ன சின்ன குழப்பம் தடுமாற்றம் . பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் சிவாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு ..பவானியின் அம்மா ஏண்டி போய் நாலு கூடம் தண்ணி பிடிச்சிட்டு வந்துருனு சொல்லளவும் சீ..அம்மா வேற என்ற நினைப்புடன் தட்ட முடியாமல் தண்ணி எடுக்க கம்மாய்க்கு செல்கிறாள் அங்கு புளிய மர நிழலில் நண்பர்களுடன் சிவா பேசி கொண்டு இருக்கிறான்.அவனை பார்க்கவும் .மனதில் சின்ன சந்தோஷம் அவன் நெற்றியை பார்வை இடுகிறாள் . காலையில் பார்தத்த்து வீக்கம் சற்று குறைந்த மாதிரி இருந்தது . அவள் அவனை நோட்டமிட்டபடி தண்ணி எடுத்து செல்கிறாள் .வீட்டுக்கு போகும் வழியில் சிவாவை கேட்கிறாள்  எப்படி இருக்குனு ...ஏன் டி இன்னொரு தடவை கதவை திறந்து மண்டையை பிளந்துறலாம் முடிவு பண்ணிடியானு சிவா கேக்க பவானி சிரிக்கிறாள் ..ஏன் நான் உங்க மண்டைய உடைக்க போறேன் னு சொல்ற சிரிச்ச படி ஏன் டி மண்டைய உடைச்சிட்டு சிரிப்பு வேறயா ...னு கேட்க்க நான் ஒன்னும் சிரிக்கல னு போகிறாள் .
(guest)

0

Reply