loading
Super man
தொடர்ந்து எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பு கிற உங்களை மாதிரி நண்பர்களுக்கு புதுசா ஒரு திட்டம் உருவாக்கி இருக்கிறேன். இனி எனக்கு அதிகபட்சமாக எஸ்.எம்.எஸ். அனுப் புற அதிர்ஷ்டசாலிகளுக்கு அட்டகாசமான பரிசுகள் தரப்போறேன்.
முதல் பரிசு : 10 லட்சம் மதிப்புள்ள காரின் அழகிய வண்ணப்படம். இரண்டாம் பரிசு : 21 இன்ச் கலர் டி.வி. வைத்துக் கொள்ள அட்டைப் பெட்டி.
மூன்றாம் பரிசு : ஸ்டார் ஓட்டல் ஒன்றில் என்னுடன் காலை உணவு, மதிய இரவு உணவு எல்லாமே. ஆனால் செலவு உன்னுடையது.
பம்பர் பரிசு : எந்த நாட்டுக்கு வேண்டு மானால் விமானத்தில் பறக்கலாம். ஆனால் டிக்கெட் நீங்க தான் வாங்கிக்கணும்.
Super man
கஞ்சத்தனத்தின் உச்சம் எது தெரியுமா? ஒருவன் தன் வீடு தீப்பற்றி எரியும் போது, தீயணைப்பு நிலையத்திற்கு மிஸ்டுகால் கொடுத்தான், அவர்கள் திரும்பவும் கூப்பிடு வார்கள் என்று.
Super man
ஒருவன் தன் நண்பர்கள் அனைவருக்கும் இப்படி ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினான். 'என் செல்போன் எண் மாறிவிட்டது! முன்பு அது நோக்கியா 6600ஆக இருந்தது இப்போது அது நோக்கியா 6610ஆக மாறிவிட்டது'.
Super man
எங்கள் ஹாஸ்டல் அறைகளின் விளக்கு கள் எரிந்தால் 'பரீட்டை நெருங்குகிறது என்று அர்த்தம். எங்கள் ஹாஸ்டல் அறைகள் சுத்தமாக இருந்தால் அன்று தான் 'கல்லூரி திறந்திருக்கிறார்கள்' என்று அர்த்தம். எங்கள் ஹாஸ்டலில் குளிக்கத் தண்ணீர் வந்தால் அன்று 'கல்லூரி விடுமுறை' என்று அர்த்தம். எங்கள் ஹாஸ்டலில் சாப்பாடு நன்றாக இருந்தால் அன்று 'மழை வரும் என்று அர்த்தம்,
Super man
ஒருவர், ஒருத்தியைப் பார்த்து ஐ லவ் யூ சொன்னார், உடனே கீழேயும் விழுந்தார். மீண்டும் ஐலவ் யூ சொல்லிக் கீழே விழுந்தார். பெண் : ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்க, அவன் : நான் காதலில் விழுகிறேன் என்றாராம்.
Super man
ஏணியில் நீங்கள் ஏறும்போது அந்த ஏணி சரியான சுவரில்தான் சாய்த்து வைக்கப் பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்!
Super man
மற்றவர்களை எழுப்புவதற்காக தன் தலையில் அடி வாங்கி கொள்கிறது கடிகாரம். அந்த வகையில் அது தியாகி ஆகிறது!
Super man
ஒரு டாக்டரின் வீட்டு வரவேற்பு அறையில் இருந்த வாசகங்கள்: நான் ஒரு தெய்வம் -நீ சாவை எதிர்நோக்கி இருக்கும் போது. 
நான் ஒரு தேவதூதன் - நீ சாவினின்று காப்பாற்றப் படும்போது.
நான் ஒரு சாதாரணமனிதன் - நீ ஓய்வில் இருக்கும் போது. 
நான் ஒரு பிசாசு - உன்னிடம் என் பீஸைக் கொடு என்று கேட்கும்போது.
Super man
அந்த பிரமுகருக்கு உடம்பெல்லாம் காயம். காரணம் வாழ்க்கையில் அடிபட்டு முன்னுக்கு வந்தவராம்.
Super man
விலைவாசி அதிகரிக்கும் வேகத்தைப் பற்றி மூவரின் உரையாடல்
"காலையில் இருந்த விலை சாயந்தரம் ஏறிடுச்சு''
"இது என்ன, வரிசையில் எனக்கு முன்னாலே நின்னவருக்கு இருந்த விலை, நான் வாங்கு றப்போ ஏறிடுச்சு."
“இதெல்லாம் பரவாயில்லை நான் பர்சுக் குள்ளே கையை விட்டப்ப இருந்த விலை கடைக்காரர்கிட்டே கையை நீட்டறப்ப ஏறிடுச்சு.''